Categories
மாநில செய்திகள்

ALERT: ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணாதீங்க…. தெற்கு ரயில்வே எச்சரிக்கை…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நாட்களில் பல பேர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றன என்று தகவல் வெளியாகியது. இதன் காரணமாக சோதனை செய்யப்பட்டு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த அடிப்படையில் பயணிகள் செய்யும் தவறுகளுக்காக அபராதமும், தண்டனையும் விதிப்பது தொடர்பான முழு விபரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது,

# டிக்கெட் அல்லது பாஸ் இன்றி பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 138-ன் கீழ், பயணித்த தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்தில் இருந்து எவ்வளவு கட்டணமோ, அது வசூலிக்கப்படும். மேலும் குறைந்தபட்சமாக ரூபாய் 250 வசூலிக்கப்படும்.

# மோசடியான பயணம் வைத்து இருப்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 137 இன் கீழ் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவதோடு, ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

# அதனை தொடர்ந்து அலாரம் சங்கிலியை இழுக்கும் செயலை செய்பவர்களுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 137 -ன் கீழ் 6 மாத சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் (அல்லது) இரண்டும் விதிக்கப்படும்.

# ஊனமுற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் மேற்கொண்டால் ரயில்வே சட்டம் பிரிவு 155 -(அ )ன் படி 3 மாத சிறை அல்லது ரூபாய் 500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

# அதன்பின் அத்துமீறி நுழையும் பயணிகளுக்கு ரயில்வே சட்டம் பிரிவு 147-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை (அல்லது) ரூபாய் 1,000 அபராதம் (அல்லது) இரண்டுமே விதிக்கப்படும்.

# மேற்கூரையில் பயணம் செய்பவருக்கு ரயில்வே சட்டம் பிரிவு 156-ன் கீழ் மூன்று மாதம் சிறை தண்டனை (அல்லது) 500 ரூபாய் அபராதம் (அல்லது) இரண்டும் விதிக்கப்படும்.

# தொல்லை கொடுப்பது, குப்பை கொட்டுவது ஆகிய செயலில் ஈடுபட்டால் ரயில்வே சட்டம் பிரிவு 145 (b)-ன் கீழ் முதல் குற்றத்திற்கு ரூபாய் 100 அபராதம், 2-வது மற்றும் தொடர்ந்து செய்தால் ரூ.250 அபராதமும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Categories

Tech |