தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக திகழும் கடற்பசுவை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கள ஆய்வு நடத்த ரூ.25 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக கடற்பசு பாதுகாப்பிற்கான வரைவு அறிக்கையை வனத்துறை சமர்ப்பிக்க உள்ளது.