நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து 210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் 33-வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தி.மு.க வினர் பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளனர்..