மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜன் சகோதரர்களான பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த கோவிந்தராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து பழனிசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.