உக்ரேனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி அவசரகால கூட்டத்தில் வைத்து பேசியுள்ளார்.
உக்ரேன் ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது உக்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனில் அமைதி மற்றும் பாதுகாப்பு மோசமாவதற்கு வாய்ப்புள்ளதாகவும், அனைத்து தரப்பினர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி போர் பதற்றங்களை தடுப்பதற்கும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டுவதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.