குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் சிலுவை பெனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரிய கேத்தரினுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரிய கேத்தரின் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சிலுவை பெனோ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலுவை பெனோவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.