மன வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் திருவிரித்தாள் பட்டி கிராமத்தில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கருப்பசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.