Categories
தேசிய செய்திகள்

ஓ மை காட்..! 17,500 அடி உயரம், -30 டிகிரி செல்சியஸ்…. 65 புஷ்-அப் செய்யும் வீடியோ…!!!

லடாக்கில் ஒருவர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 17 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள சிகரத்தில் புஷ்-அப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படையின் மத்திய மலையேறும் குழுவினர் லடாக்கில் உள்ள ஒரு மலை சிகரத்தில் முதன் முறையாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தோ- திபெத்திய எல்லை காவல் கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனல் (வயது 55) லடாக்கில் 17,500 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறியுள்ளார்.

அதுவும் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மற்றும் ஒரே நேரத்தில் 65 புஷ்-அப்களை முடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியானது ITBP என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது வீரர்களின் மன உறுதி,உடல் உறுதி  ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |