தமிழக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த வருடம் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்து விட்டது. இதையடுத்து டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும்.மேலும் அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மொத்தம் மூன்று அலங்கார ஊர்திகள் தமிழக அரசின் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன. அதன் தொடர்ச்சியாக முதல்வர் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் பார்வைக்காக அந்த அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் அலங்கார ஊர்திகளுக்கு சிறப்பான வரவேற்ப்பை பொதுமக்கள் அளித்தனர். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மணல் பரப்பில் இந்த ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒருவாரம் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு வருவதாகவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை ஏற்று மேலும் ஒரு வாரம் இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.