Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணாங்க…. பேனர்கள் தீ வைத்து எரிப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

திமுக வேட்பாளர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மொபட் மற்றும் பேனர்களை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் 15-வது வார்டில் தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகர் தேர்தலுக்காக மேட்டுத்தெருவில் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்து அங்கு விளம்பர பிளக்ஸ், பேனர்கள் கட்டியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அருகே நின்று கொண்டிருந்த மொபட்டுக்கும் தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |