பெட்டி கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் சாகித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஷகிலா குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மது அருந்திவிட்டு சாதிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாதிகின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.