வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்குளி சாலையில் தவுட்டு கடை வைத்திருந்தார். இந்நிலையில் கருப்பசாமி கடந்த 2010-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து விட்ட காரணத்தினால் கருப்பசாமி 2- வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருப்பசாமிக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுல கோபித்து கொண்டு கருப்பசாமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து கருப்பசாமியை அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கருப்பசாமியின் சட்டைபையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் தனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருக்கிறது. இதனை எவ்வளவோ சொல்லியும் மனைவி கேட்காததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கருப்பசைமியில் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.