Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

2 வார்டுகளை வென்ற மாமியார் மருமகள்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் …. !!

மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி  பெற்றுள்ளார்கள் .

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நகராட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடந்த 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில்  விருதுநகர் மாநகராட்சியில் 27 -வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போடியிட்ட பேபி   வெற்றி பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 26-வது வார்டில்  இவரது மருமகளான சித்தேஸ்வரி  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் மாமியார் மருமகளும் அடுத்தடுத்த வார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

Categories

Tech |