தமிழகத்தில் மேலும் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் 618 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து 2,153 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து 10,782 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 34,47,006 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 33,98,231 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒட்டு மொத்த உயிரிழப்பானது 37,993 ஆக அதிகரித்துள்ளது.இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் கீழாகவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.