Categories
சினிமா

“புது வீட்டுக்கு குடியேறிய பரியேறும் பெருமாள் இயக்குனர்”…. உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…!!!

இயக்குனர் மாரி செல்வராஜின் புது வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படமானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் சென்னையில் தான் கட்டியிருக்கும் புதிய வீட்டிற்கு குடும்பத்தோடு குடியேறினார். இவரின் குருநாதர் இயக்குனர் ராம் மற்றும் பல நெருங்கிய இயக்குனர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இவர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இவர் இயக்கும் திரைப்படத்தின் நாயகன், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இவர் வீட்டுக்கு வருகை புரிந்தார். மாரி செல்வராஜின் மகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். உதயநிதி ஸ்டாலின் மலர் கொத்து மற்றும் பொருள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவீஸின் இணை இயக்குனர் செண்பக மூர்த்தி, நிர்வாகி ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |