எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரீலீஸானது வலிமை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீசாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு இடையே சிறிது பயமும் உள்ளது. ஏனெனில் எந்த திரைப்படம் ரிலீசானாலும் ஆன்லைனில் வெளியிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைனில் படத்தை கசிய விடக்கூடாது என தடை போட்டிருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் எப்படியாவது ரிலீஸ் செய்து விடுகின்றது. இதனால் வலிமை திரைப்படம் ஆன்லைனில் கசிந்து விடுமோ என்ற பயம் ரசிகர்களுக்குள் இருக்கின்றது.
இத்திரைப்படத்தின் இயக்குனர் வினோத், படத்தின் முதல் காட்சியை பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார். ஏனெனில் படத்தை பல முறை பார்த்திருக்கின்றேன் என்கிறார். எச்.வினோத், வலிமை திரைப்படமானது அனைவரையும் கவரும் என கூறுகிறார். ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் என இரண்டும் கலந்திருக்கும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ளது வலிமை. மேலும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைகின்றார் அஜீத் குறிப்பிடத்தக்கது.