Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! இந்த ஆப்பை யூஸ் பண்ணாதீங்க…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

SRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் நூதன கும்பல்களின் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் உரிய அனுமதியும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்sRide எனப்படும் மொபைல் ஆப்பை  பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதில்sRide உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் குர்கானில் பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. கார் பூலிங் சேவையைsRide நிறுவனம் ஃப்ரீ பெயர் அடிப்படையில் வழங்கி வருகிறது இருப்பினும் பரிவர்த்தனை மற்றும்செட்டில்மெண்ட் சிஸ்டம் சட்டம்  2007 கீழ் reserve வங்கியிடம்sRide நிறுவனம் அனுமதி பெறவில்லை.

அதனால் இந்த ஆப்பை  பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் பரிவர்த்தனை சார்ந்த செயல்களில் ஈடுபடும் மக்களை நம்பி மக்கள் பணத்தை அனுப்ப வேண்டாம் எனவும் ரத்த வங்கி எச்சரித்துள்ளது.

Categories

Tech |