பாலாறு மேம்பாலத்தில் பால பராமரிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று (பிப்.24) முதல் வழக்கமான போக்குவரத்து இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்திருந்தது.
இதனால் பால சீரமைப்பு பணிக்காக பாலத்தை மூடுவதாக கடந்த 7-ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு திருச்சியிலிருந்து இருந்து சென்னை வரும் வாகனங்கள், மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாலாறு பாலத்தில் புதுப்பித்தல் பணி முடிவடைந்ததால் மீண்டும் இன்று (24-ந்தேதி) போக்குவரத்து திறக்க இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் இந்த பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது.