தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பெரியகுளம் உப மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயர்மின் அழுத்த கம்பிகள் பராமரிப்புப் பணிகள் இன்று (பிப்.24) நடைபெற உள்ளது. எனவே எண்டப்புளி, எ.புதுப்பட்டி, வேல்நகா், எ.காமாட்சிபுரம், நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, தண்ணீர் பந்தல், டி.வாடிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளர் பாலபூமி செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.