Categories
தேசிய செய்திகள்

“போர் வேண்டாம், அமைதியே வேண்டும்” மணல் சிற்பத்தில் வாசகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் ஒருவர் உக்ரைன்- ரஷ்யா இடையே அமைதி தேவை என்பதை குறிக்கும் வகையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடாக திகழும் உக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அங்கு ரஷ்யா உக்ரைன் மீது குண்டு மழை பொழிய தொடங்கியது.

இதனை அடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் ஆனது நீடித்து வரும் நிலையில், அங்கு ஒரு அமைதி நிலவ வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் ஒருவர், ஒடிசாவின் புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக் என்ற இவர் இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் ஆவார்.

மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கொடிகளை சுமந்தவாறு புறாக்களை அமைத்து ‘போர் வேண்டாம் என்றும் அமைதியே வேண்டும்’ என்ற வாசகத்துடன் கூடிய அந்த மணல் சிற்பத்தை பட்நாயக் வடிவமைத்துள்ளார். தற்போது இணையத்தில் இந்த மணல் சிற்பம் ஆனது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |