Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் …!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது .

நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் .

Image result for neet exam hall

மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான இந்தாண்டில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ,கட்டை விரல் ரேகை ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்த பட்டுள்ளது .ALLMS ,JIPMER கல்லுரிகளில் சேர தனி நுழைவு தேர்வு கடந்தாண்டு வரை நடத்தப்பட்ட நிலையில் ,இந்தாண்டு முதல் நீட் தேர்வு மூலமே அந்த கல்லுரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது .

Categories

Tech |