Categories
மாநில செய்திகள்

செக் மோசடி வழக்கு…. திமுக எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட்…. கரூரில் பரபரப்பு….!!!!

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட். கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்.எல்.ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 09-03-21-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18.10.21, 02.12.21, 24.01.21 என 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.

இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்றும் அவர் ஆஜராகாததால் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. குளித்ததலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |