Categories
உலக செய்திகள்

#RussiaUkraineConflict:… உக்ரைனின் 4 நகரங்களை…. “தாக்கி வரும் ரஷ்யா… பெரும் பதற்றம்..!!

உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது.

ரஷ்யா, உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில்குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளுக்கு ரஷ்யா தங்களது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இதனால் உக்ரைனின் அரசுப் படைகளின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் படை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..

தற்போது உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்கத் தொடங்கியது ரஷ்யா.. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

https://twitter.com/imAmanDubey/status/1496686262400724994

Categories

Tech |