Categories
மாநில செய்திகள்

BREAKING : உக்ரைன் போர் பதற்றம்… தமிழர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்… தமிழ்நாடு அரசு..!!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்ததால் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு எண்களை அறிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி நகரமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளுக்கு ரஷ்யா தங்களது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இதனால் உக்ரைனின் அரசுப் படைகளின் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் படை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.. மேலும் அவர் உக்ரேன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது உக்ரைனின் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை தாக்கத் தொடங்கியது ரஷ்யா.. அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு. இந்த போரால் அதிக அளவில் உயிரழப்பு ஏற்படும் என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள் பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால்  044-28515288, 96000 23645, 99402 56444 ஆகிய எண்களை அணுகலாம் என்று தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. மேலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |