ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் போருக்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் அழிவை சந்திப்பார்கள் என்று அதிபர் புடின் எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.