கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை வேல்வார்கோட்டை பிரிவில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை சுக்காம்பட்டி பகுதியிலிருந்து ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று தொழிற்சாலை நூற்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.