நகை மற்றும் பணத்தை தன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஞானிபாளையம் பகுதியில் இந்துமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் பெயர் ஹரிபாபு. இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். எனது கணவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனார்.
அப்போது வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் 7 பவுன் தங்க நகை மற்றும் 1800 சதுர அடி நில பத்திரம் ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளார். இன்றுவரை எனது கணவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை. எனவே மாயமான எனது கணவரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமதி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.