திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மினிவேன் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேன் இரவு 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றுள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மகேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான மினி வேனை மீட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.