உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் 2 லட்சம் ராணுவ வீரர்களை, எல்லையில் ரஷ்யா குவித்து இருக்கிறது.
ஆகவே கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதனிடையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையனா சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகள் வணிகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது..