மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை முல்லை நகரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன், முத்துக்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வத்தனாக் கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.