மேஷ ராசி அன்பர்களே…!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி ஒன்று உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.
நண்பர்களிடம் மன ஸ்லோகங்கள் ஏற்படலாம். சுப செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்கு உண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இருந்தாலும் அவர்கள் இடம் தெரியாமல் போக கூடிய சூழலும் இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்