Categories
உலக செய்திகள்

OMG: இந்தியர்களை மீட்பதில் சிக்கல்…. எதற்காக தெரியுமா?…. திரும்பிய விமானம்….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்புகிறது. டெல்லியில் இருந்து சென்ற விமானம் கீவ் நகரை நெருங்கியபோது, எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் விமானம் திருப்பி விடப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடங்கியுள்ள போரால் வான்வெளித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கைக்கு பின்னரே விமானம் திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

Categories

Tech |