உக்ரைன் நாடாளுமன்றம் போர் அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசர நிலையை அந்நாட்டில் பிரகடனப்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால் அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு உக்கிரன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று கூறி வந்துள்ளார்.
இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை அந்நாடு தனி நகரங்களாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி அங்கு தங்களது படைகளையும் ரஷ்யா குவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாடாளுமன்றம் ரஷ்ய போர் அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டிற்குள் தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.