Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி”…. வட்டமேஜை மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் உரை….!!!

காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாட்டில் மைக்ரோசாஃப்ட்  நிறுவனர் பில்கேட்ஸ் உரையாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் உள்ளது. மேலும் இந்தியா-அமெரிக்க சுகாதார கூட்டணி குறித்து காணொலி காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டின் நோக்கம் உலக மக்களுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்கவும், இந்திய-அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையிலும்  இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை  ஒருங்கிணைப்பது ஆகும். இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் ‘பில்கேட்ஸ்’ கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அதில் “கடந்த ஆண்டு இந்தியா 15 கோடி கொரோனா தடுப்பு ஊசிகளை கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாடும் நிமோனியா மற்றும் ரோட்டோ வைரஸ் போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. இந்த நோய்கள் கடந்த பத்தாண்டுகளாக குழந்தைகளுடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இதனையடுத்து அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஆழம் குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார். மேலும் இந்த திட்டத்தை நனவாக்க பகிரப்பட்ட லட்சியம் மற்றும் கூட்டாண்மை மிக முக்கியமாகும். மேலும் கோவேக்சின் கோர்பாவேக்ஸ் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் துறைகளையும் எல்லைகளையும் இணைக்கும் கூட்டாண்மையின் தயாரிப்புகள்” என்று கூறினார்.

Categories

Tech |