Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…”தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்”.. தாராள பண வரவு கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். உறவினர் நண்பர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். தாராள பண வரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று காரியத்தில் அனுகூலம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணத்தேவை மட்டும் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.

எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக இருக்கும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதையும் ஆராய்ந்து செய்வது ரொம்ப சிறப்பு. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மையே கொடுக்கும். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து படங்களை படியுங்கள் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |