Categories
உலக செய்திகள்

“பெரும் பதற்றம்!”… உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்ட புடின்….!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்திருப்பது, போர்  பதற்றத்தை அதிகப்படுத்தியது. மேலும், ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கலாம் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. எனினும், ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்கும் திட்டம் கிடையாது என்று கூறி வந்தது.

ஆனாலும், உக்ரைன் நாட்டிலுள்ள இரு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க புடின் உத்தரவிட்டார். அதன் பிறகு, அந்த இரு மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் நுழைய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மேலும், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள், ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.

இந்நிலையில், ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது, நடவடிக்கை மேற்கொள்வதற்கு விளாடிமிர் புடின் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ படைகள் தங்களின் ஆயுதங்களை கீழே போட்டுவிட வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |