Categories
உலக செய்திகள்

பழிவாங்குவோம்; ஈரானின் புதிய தளபதி சபதம்

ஈரானின் புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி ,சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக  சபதம் ஏற்றார்.

 

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். பின்னர் அவரது இடத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி,  கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி  சடங்கில் கலந்துகொண்டார். அப்பொழுது காணி அவரது பிரேதப் பெட்டியின் மேல் விழுந்து கதறி அழுதார். மேலும் சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார்.

மேலும் சுலைமானியின் பாதையில் அதே வலிமையுடன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என உறுதி தெரிவித்தார்.  புதிய தளபதி காணி கொல்லப்பட்ட சுலைமானின் தலைமையின் கீழ் நீண்ட காலமாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |