Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”நல்ல பலன் கிடைக்கும்”.. லாப விகிதம் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!!  இன்று இஷ்ட தெய்வ அணுகிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகள் செய்வார்கள். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். காரியத்தில் சிறப்பான வெற்றி இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட இனங்களில் இருந்து வந்த சுணக்கநிலைகள் மாறும்.

முன்னேற்றம் நல்லபடியா இருக்கும்.  மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அனுகூலம் ஏற்படும். இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு  மேற்கல்விக்கான நல்ல முயற்சியும் கல்வியில் ஆர்வம் ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |