கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று சூழ்ச்சி மனதுடன் பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் புத்துணர்வைக் கொடுக்கும். இன்று அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கொள்கை பிடிப்பில் தளர்ச்சி கொஞ்சம் ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்திறமை வெளிப்படும். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு கல்விக்காக மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்