Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரங்களை அதிகாரிகள்   பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  உடையனேந்தல் குண்டாற்று படுகையில்  அனுமதியின்றி ஆற்று மணல் அல்ல படுவதாக திருச்சுழி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு தகவலின்படி துணை தாசில்தார் சிவனாண்டி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் சிலர் அப்பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து  அதிகாரிகளை பார்த்ததும்  மண் அள்ளி கொண்டிருந்த மர்ம  நபர்கள் லாரியில்  தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் மண் அள்ளுவதற்கு  பயன்படுத்தி இயந்திரங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |