உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.
அதாவது உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ தளங்களை மட்டுமே தாக்கி வருவதாக கூறிய ரஷ்யா பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராணுவ வாகனங்கள் மூலமாகவும், பாராசூட் மூலமாகவும் ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது..