ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்த நாளான இன்று போயஸ்கார்டனில் மரியாதை செலுத்த வந்த தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “போயஸ் கார்டன் எங்களிடம் வந்த பிறகு அவர் வாழ்ந்த இடத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். மேலும் உள்ளே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முழுமையாக முடிந்த பிறகு இங்கே குடியேற உள்ளோம். ஜெயலலிதா பயன்படுத்திய கார் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. இது குறித்து புகார் அளிக்க உள்ளோம்.
இதனை தொடர்ந்து கோடநாடு இடம் குறித்த தகவல் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. இதுவரை சசிகலாவும் எங்களிடம் எதுவும் பேசவில்லை” என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அரசு உயரதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.