ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்-வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகளை மறிப்பவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தவும் ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எப்போதும் வைத்திருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் +38 0997300483, +38 0997300428, +38 0933980327, +38 0935046170, +38 0635917881 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்..