கடந்த சில நாட்களுக்கு முன்பு மனித நேயம் தொடர்பாக பேசி வைரலான சிறுவன் அப்துல்கலாம், இன்று(பிப்..24) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுவனுக்கு பரிசு ஒன்றை வழங்கிய ஸ்டாலின் அவருடைய பேச்சையும், செயலையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது மனிதநேயம் நம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிறுவன் அப்துல்கலாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது..
நாட்டில் மனிதநேயம் வளரனும் அப்பத்தான் சார் நாட்டில் ஒற்றுமை வளரும்.தமிழ்நாட்டு பள்ளி மாணவனின் தெளிவான புரிதல்👌👌👏👏 pic.twitter.com/ttgkIJ9Mbf
— Delta Tamilian (@deltatamilian) February 20, 2022