Categories
உலக செய்திகள்

எங்கள் பிரச்சனையில் தலையிட்டால்…. வரலாறு காணாத விளைவுகளை சந்திப்பீர்கள்… புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தலையிடுபவர்கள், வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிபர் புடின் எச்சரித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் அதிகப்படியான படைவீரர்களை ரஷ்யா குவித்தது. மேலும் அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என்றும் பெலாரஸ் நாட்டு ராணுவத்தோடு கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதற்காக தான் படைகளை குவித்திருக்கிறோம் என்றும் கூறியது.

எனினும், ஐ.நா அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் ராணுவப் படைகள், தங்கள் ஆயுதங்களை கீழே போடுமாறு உத்தரவிட்டதோடு, தங்கள் படைகளை அந்நாட்டின் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்ததாவது, ரஷ்யர்கள் போர் நடைபெறுவதை விரும்புகிறார்களா? இதற்குரிய பதில், ரஷ்யக் கூட்டமைப்பின் குடிமக்களான உங்களுக்கானது என்று தெரிவித்தார். மேலும் புடின் இது பற்றி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொள்ளவில்லை.

எங்களின் திட்டம், ராணுவ நடவடிக்கைகளை உக்ரைன் கைவிட வேண்டும் என்பது தான். இந்த  பிரச்சினையில் யாரும் தலையிட முயன்றால், அதற்கு தக்க பதிலடியை ரஷ்யா தரும். மேலும், அவர்கள் தங்கள் வரலாற்றிலேயே சந்திக்காத கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

Categories

Tech |