Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உன்கூட வர மாட்டேன்” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் அம்மன் கோவில் சன்னதி தெருவில் கூலி தொழிலாளியான மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்வதி மகேஸ்வரனை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மகேஸ்வரன் பார்வையை அழைத்துள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |