Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. வாலிபர்கள் செய்த செயல்…. குமரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் காவல் நிலையத்தில் மகேஷ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கம்பாகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகேஷ் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்களும் மகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காயமடைந்த போலீஸ் ஏட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |