விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.