Categories
சினிமா

உங்க வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை…. அஜித்திடம் மன்னிப்பு கேக்கும் ரசிகர்கள்…. எதற்காக தெரியுமா….???

வலிமை திரைப்படம் ரீலீஸாகிய நிலையில் அஜித் கூறியதை நிறைவேற்ற முடியவில்லை என ரசிகர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது அஜித் திரைப்படமானது வெளியாகி உள்ளது. இதனால் வலிமை திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் அஜித்தின் என்ரியானது மாஸாக உள்ளது. வினோத் சூப்பராக அஜித்தின் என்ட்ரியை இயக்கியுள்ளார். வலிமை திரைப்படத்தில் அஜித் இப்படி என்ட்ரி கொடுப்பாரா  என வியந்து பார்க்கும் அளவிற்கு சண்டை காட்சிகள் இருக்கின்றது.

இத்திரைப்படத்தின் பலமாக அமைந்துள்ளது ஆக்சன் காட்சிகள் தான். இந்நிலையில் அஜித்தை அனைவரும் அன்போடு தல என்று அழைப்பார்கள். ஆனால் சமீபத்தில் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம். அஜித், அஜித் குமார், ஏகே என்று அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனால் ரசிகர்கள் அஜித் சார் என்று அழைத்து வந்த நிலையில் வலிமை படமானது தியேட்டரில் ஓடும் பொழுது தல என்று கத்தினால் மட்டுமே நெருக்கத்தோடும் அன்போடும் மரியாதையுடனும் இருக்கின்றது. அஜித், அஜித் சார் என்று கூப்பிட்டால் அது மாஸாக இல்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் அஜித்தின் வேண்டுகோளையும் மீறி தல என்று கூப்பிட்டதற்கு அஜித் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றனர்.

Categories

Tech |