துபாயில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவரிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 250 கிராம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதே போல மதுரையை சேர்ந்த பொன்முடி (வயது 48) என்பவரது உடைமையை சோதனை செய்த போது, அவர் கொண்டு வந்த கைப்பையில் 250 கிராம் தங்கத்தை சுருள் வடிவில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.12 லட்சத்து 84 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.